அரியலூர் : அரியலூர் மாவட்டம் , மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. இளஞ்சியம் மற்றும் காவல் துறையினர், நேற்று ரோந்து பணியில், ஈடுபட்டு இருந்தனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள, இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்த சங்கர் (51), முக்குளம் இருளர் தெருவை சேர்ந்த, சேகர் (49), ஆகியோர் அப்பகுதியில் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல் துறையினர் , கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 4 மதுபாட்டில்களும், பறிமுதல் செய்யப்பட்டன.