பெரம்பலூர் : பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (40), இவர் பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சரவணன் நேற்று தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதனை கண்ட காவல் துறையினர், சரவணனை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில், அடைத்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்து 360 பறிமுதல் செய்யப்பட்டது.