மதுரை : காரியாபட்டி வில்லிபத்திரியை, சேர்ந்த மாரியப்பன். இவரது பெட்டிக்கடையில், உணவு பாதுகாப்பு அலுவலர் திரு . முகமது இஸ்மாயில் காசிம், ஆய்வு மேற்கொண்டதில், ரூ.46 ஆயிரத்து 200 மதிப்புள்ள, புகையிலை, பான்பராக் , குட்கா பாக்கெட்டுகளை கைப்பற்றி, கடைக்கு சீல் வைத்தார். மல்லாங்கிணர் காவல் துறையினர், அவரை கைது செய்தனர்.
————————-
பேட்டரிகள் திருட்டு : சாத்துார் சடையம்பட்டியில், லாரி செட் நடத்தி வருபவர் பிச்சை, (39), மே 14 இரவு லாரி செட்டில் நிறுத்தியிருந்த 2 வேன், 1 லாரியில் பொருத்தியிருந்த, 3 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சாத்துார் தாலுகா காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி