சென்னை: சென்னையில் கைவிடப்பட்ட நிலையில் யாரும் உரிமை கோராமல் சாலைகள் மற்றும் தெருவோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த 121 வாகனங்களை அகற்றி சட்டப்பூர்வ நடவடிக்கை. மேலும் கடந்த 2 நாட்களில் போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 8,628 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. In Chennai, legal action was taken to remove 121 vehicles which were abandoned and parked on the roads and streets without anyone claiming ownership.
In the special drive by the traffic police, 8,628 cases of traffic violations were charged in the last two days.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் சென்னையில் சாலை விபத்துகளை தவிர்க்கவும், வாகன நெரிசல் இல்லாமல் போக்குவரத்து சீராக செல்வதற்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள பல்வேறு சாலைகளில், பழைய மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வாகனங்கள், யாரும் உரிமை கோராமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களை சிலர் நிறுத்தி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வந்தனர். இதுபோன்று யாரும் உரிமை கோராமல் கைவிடப்பட்ட நிலையில் (Unclaimed and Abandoned) உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த கடந்த 15.03.2022 அன்று மாலை 4.00 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை பெருநகர் முழுவதும் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் யாரும் உரிமை கோராத கைவிடப்பட்ட நிலையில் உள்ள 128 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் 121 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் சாலைகள் மற்றும் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகில் கைவிடப்பட்ட வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கடந்த 15.03.2022 அன்று மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை சென்னை பெருநகர் காவல் எல்லைக்குட்பட்ட 88 முக்கிய சந்திப்புகளில் எந்தவொரு வாகனமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாத வண்ணம் ஜீரோ வைலேசன் (Zero Violation) பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் போக்குவரத்து சிக்னல்களில் Stop line ஐ தாண்டிச்சென்று போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 1,523 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் மூன்று நபர்கள் (Triple Ride) பயணம் செய்த குற்றத்திற்காக 651 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 4,476 வழக்குகளும், மேலும் 16.03.2022 அன்று போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பு சோதனை மேற்கொண்டு சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி எதிர்புறமாக வாகனம் ஓட்டி வந்த 1,978 நபர்கள் என மொத்தம் 8,628 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து, சென்னை பெருநகர போக்குவத்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.