சென்னை : புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, என்.எல்.புரத்தை சேர்ந்தவர் தனஅரசு (23), இவர், கூடுவாஞ்சேரியில் தங்கி, உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று மாலை பணிமுடிந்து கூடுவாஞ்சேரியில், உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பெருங்களத்துார் சிக்னலை கடந்து சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது சாலையோரம் கட்டப்பட்டிருந்த, தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய தனஅரசு, சம்பவ இடத்தி்லேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து, புலனாய்வு பிரிவு காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.