மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில், காளியம்மன்கோயில் திருவிழாவையொட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு பாதுகாப்பிற்காக, வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் திரு. அண்ணாதுரை, ஏட்டுகள் திரு. ராஜேந்திரன்,திரு. ரங்கநாதன், திரு. பாண்டி, திரு. பழனிவேல்ராஜன், ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது, நாடகமேடை முன்பு திடீரென இருதரபினருக்கு, இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு அங்கிருந்து நாற்காலிகளை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது, அவர்களை விலக்கச் சென்ற ஏட்டு திரு. ராஜேந்திரன், திரு. ரங்கநாதன், ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித், வீரணன் ஆகிய இருவரும் சேர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசிகொண்டுகாவல் துறையினரை தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த காவல் துறையினர், உடனே, மற்ற காவல் துறையினர், அவர்கள் இருவரையும் பிடித்து வந்தனர். இச்சம்பவம் குறித்து, ஏட்டு திரு. ராஜேந்திரன், கொடுத்த புகாரின் பேரில், வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து, ரஞ்சித், வீரணன், விஜய் பாண்டி, பழனி, பாஸ்கரன், அழகுமலை ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி