கோவை : கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் உதவி நகரமைப்பு, அதிகாரியாக இருப்பவர் திரு. ஐசக் ஆர்தர், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயற்பொறியாளராக, இருப்பவர் திருமதி. சசிபிரியா, இவர்கள் இருவரும் 2015-ல் கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்தில் பணியாற்றினர். அப்போது வார்டு எண் 23ல், இரண்டு பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரண்டு பணிகளையும் செய்வதற்கான, டெண்டர், கான்ட்ராக்டரான பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையத்தை சேர்ந்த இளங்கோவுக்கு, வழங்கப்பட்டது.
அவரும் மாநகராட்சி அதிகாரிகள், திரு. ஐசக் ஆர்தர், திருமதி. சசிபிரியா ஆகியோரும், இணைந்து பணம் சுருட்ட சதித்திட்டம் தீட்டினர். டெண்டருக்கான வேலையை செய்யாமலேயே , செய்ததாக போலி பில்களை இளங்கோ தயாரித்தார். இந்த உண்மையை அறிந்தும், பணிகள் செய்யப்பட்டதாக, இளநிலை பொறியாளர் திரு. ஐசக் ஆர்தர் பதிவு செய்தார். அதை சரி பார்த்ததாக திருமதி. சசிபிரியாவும் , சான்று அளித்தார். இதற்கென கான்ட்ராக்டருக்கு வழங்கப்பட்ட, பத்து லட்ச ரூபாயை மூவரும், சேர்ந்து சுருட்டினர். இதையறிந்த கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் , மூவர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.