கோவை : வ.உ.சி., மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி, கண்காட்சி மற்றும் ஓராண்டு, சாதனை ஓவிய கண்காட்சியை, தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின், திறந்து வைத்து, பார்வையிட்டார். ஓவியக்கண்காட்சியில் உள்ள படங்களை பற்றி, ஆட்சியர் திரு. சமீரன், விளக்கினார். இக்கண்காட்சியில், தொல்லியல் துறை, சார்பில் கீழடி (வைகை நதிக்கரையில் நகர நாகரிகம்), பொருநை (ஆற்றங்கரை நாகரிகம்), கொடுமணல் (சங்க கால தொழிற்கூடம்), மயிலாடும்பாறை (4,200 ஆண்டுகள் பழமையான இரும்பு கால பண்பாடு), ஆகிய தொல்பொருட்கள் கண்காட்சியும், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியும் 10,000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியை, 25ம் தேதி வரை, 7 நாட்கள் தினமும் காலை, 10.00 முதல் இரவு, 9.00 மணி வரை பார்வையிடலாம். தமிழ்நாடு தொல்லியல் துறையால், மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட, முதுமக்கள் தாழியில் உள்ள நெல்மணிகளின், காலம் கி.மு., 1155 என, கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தண் பொருநை, என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. என்பதை அறிவியல் ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் உள்ளது. தொன்மையான சமூகத்தின் நாகரிகத்தினை, பறைசாற்றும் அகழ்வாராய்ச்சி கண்டெடுப்புகளை, காண பொதுமக்கள், தமிழ்பற்றாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.