கோவை: கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், ரோட்டில் உள்ள வரதராஜ புரத்தை, சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மனைவி சாவித்திரி (58), இவருக்கு சொந்தமான 87.40 சென்ட் இடம், இடிகரை வடக்கு தோட்டம், பகுதியில் உள்ளது. நேற்று சாவித்திரியும் அவரது மகள் பிரீத்தா (38), இருவரும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கோவிந்த நாயக்கன்பாளையம் , சசிகுமார் மனைவி ஸ்ரீ பிரபா (33), இடத்தில் பங்கு கேட்டு சாவித்திரியிடம், தகராறு செய்தார் .பின்னர் அவர்கள் இருவரையும் தாக்கி, கார் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது, இதுகுறித்து சாவித்திரி பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையில், புகார் செய்தார். ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், இதுதொடர்பாக ஸ்ரீ பிரபா மீது 3 பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்