கோவை : கோவை குறிச்சி அருகே உள்ள சிட்கோ, பிள்ளையார்புரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி (59), இவரது மருமகள் கடந்த 2016-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வரதட்சணை, கேட்டு கிருஷ்ணவேணி, கொடுமைப்படுத்தியதால் மரு மகள் தற்கொலை செய்து கொண்டதாக, கிருஷ்ணவேணி, உட்பட குடும்பத்தினர் கைது. செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கிருஷ்ணவேணி உட்பட, அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து கிருஷ்ணவேணி, கோவை மத்திய சிறையில் உள்ள பெண் தண்டனை கைதிகள், அடைக்கப்படும் பிரிவில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ், மூலம் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் இறந்தார் இது குறித்து ரேஸ்கோர்ஸ், காவல்துறையில், சிறை பொறுப்பாளர் தாரணிபுகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.