கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு .பிரதீப் குமார், மத்திய அரசு பணிக்கு மாறுதல் செய்யப் பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக, மத்திய மண்டல ஐ.ஜி.,யாக பணியாற்றிய திரு . பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், பள்ளிப்படிப்பை அகஸ்தீஸ்வரத்திலும், பட்டப்படிப்பை மதுரை வேளாண் கல்லுாரியிலும் படித்தவர். 2003ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்ற இவர், மதுரை, திருவண்ணாமலை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர். திருச்சி டி.ஐ.ஜி., ஆகவும், சென்னை கிழக்கு மண்டல இணைஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
கமிஷனர் மட்டுமின்றி, கோவை மாநகர துணை காவல் ஆணையர்கள், நால்வரும் மாற்றப்பட்டுள்ளனர். வடக்கு துணை ஆணையர் திரு . ஜெயச்சந்திரன், போக்குவரத்து துணை ஆணையர் திரு .செந்தில் குமார், தலைமையக துணை ஆணையர் திரு .செல்வராஜ், தெற்கு துணை ஆணையர் திருமதி. உமா, ஆகியோர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மற்றொரு பணியிட மாறுதல் பட்டியல், ஓரிரு நாட்களில், வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.