கோவை : தமிழ்நாடு காவல்துறையில் 1997 ஆம் ஆண்டு, இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்த 151 பேர், கோவை மாநகரில் சிறப்பு காவல் ஆய்வாளராக, பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 25 ஆண்டுகள் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாமல் , பணி நிறைவு செய்திருக்க வேண்டும் . இதில் 10 ஆண்டுகள் ஏட்டுகளாக , பணி புரிந்திருக்க வேண்டும். இதன் படி கோவை மாநகரில் மொத்தம் 151 பேர் இன்று சிறப்பு காவல் ஆய்வாளராக, பதவி உயர்வு பெற்று உள்ளனர். அவர்களில் 136 பேர் உள்ளூர் காவல் நிலையங்கள் , மற்றும் நுண்ணறிவு பிரிவு, அலுவலகத்தில் பணியாற்றியவர்கள்.
மீதி15 பேர் ஆயுதப் படையில், ஏட்டுக்களாக பணியாற்றியவர்கள், ஆவார்கள்காவல் ஆய்வாளராக, பதவி உயர்வு பெற்ற 151 பேரும் இன்று, காவல் ஆணையர் திரு. பிரதீப் குமார், மற்றும் துணைகாவல் ஆணையர் , உதவி காவல் ஆணையரிடம் வாழ்த்து பெற்றனர். கோவை மாநகர காவல்துறைதனிப்பிரிவில் , காவலர் ஏட்டாக பணிபுரிந்த சிவக்குமார், சசிகாந்த், ஸ்டெல்லா, சசிகுமார், சரவணன், கிருஷ்ணன், லோகநாதன், செந்தில், பாலசுப்பிரமணிபன் ஆகி யோர் சிறப்பு சிறப்பு காவல் ஆய்வாளராக, பதவி உயர்வு பெற்றுள்ளனர். மாநகர காவல் ஆணையர், அவர்கள் திரு. பிரதீப்குமாரை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அருகில் தனிப்பிரிவு, உதவி காவல் ஆணையர் திரு. முருகவேல் அவர்களிடமும் வாழ்த்து பெற்றனர்.