கோவை : மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் , நேற்று கோவை விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர், அப்போது சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு, வந்த விமானத்தில் வந்த ஒரு தம்பதி மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மலேசிய நாட்டு தம்பதிகளான அவர்கள், வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டனர். அப்போது அந்த பையில் 4 கிலோ, 200 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள், இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு 2 கோடியே 26 லட்சம் ஆகும். இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த மலேசிய நாட்டு, தம்பதிகளாக தங்கேஸ்வரன், அவரது மனைவி நந்தினி, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .அவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை புழல் சிறைக்குமாற்றபடுவார்கள், என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ரூ 2 கோடியே 26 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த, வெளிநாட்டு தம்பதிகள் கைதானது, கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.