கோவை: கோவை ரத்தினபுரி ,ராஜு நாயுடு முதல் வீதியை, சேர்ந்தவர் குணா (வயது 34), பெயிண்டிங் தொழில் செய்துவருகிறார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் ( வயது 24), இவர் தனியார் நிறுவன ஊழியர். அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்ததால் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். அவர்கள் 2பேரும் சேர்ந்து குணாவின் வீட்டில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம் . இதனால் சந்தோஷ் ,அடிக்கடி குணா, வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் குணாவின் மனைவியுடன் சந்தோஷ்க்கு காதல் ஏற்பட்டது.
இதையறிந்த குணா தனது மனைவி மற்றும் சந்தோஷை கண்டித்தார். இதனால் அவர்களிடையே நேற்று தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் கத்தியால் குணாவை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பட்டுள்ளார். இதுகுறித்துரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் செய்யபட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர் சந்தோஷை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.