கோவை : கோவை ஏப் 29 கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கூ.கவுண்டம்பாளையம், கிழக்கு வீதியில் வசிப்பவர் அய்யா சாமி ( வயது 54) , இவரது மனைவி கலாமணி (வயது 46), தாயார் வள்ளியம்மாள்(வயது 70) ,நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அய்யாசாமியும் அவரது தாயாரும் காற்றோட்டத்துக்காக வீட்டு திண்ணையிலும், மனைவி கலாமணி வீட்டினுள்ளும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்மநபர் படுக்கையறையில் இருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடினார். அந்த சத்தம் கேட்டு கலாமணி, மர்ம நபரைப் பார்த்து கூச்சலிட்டார். உடனே அங்கிருந்தவர்கள் அந்த ஆசாமியை துரத்திச் சென்றனர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில், புகார் செய்யபட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.