கோவை : மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை மீறி நேற்று கோவையில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தர வின் பேரில் மாநகரம் முழுவதும் போலீசார் டாஸ்மாக் பார் அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் ரத்தினபுரி , 7-வது வீதியிலுள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே சோதனை நடத்தியபோது 57 மதுபாட்டிகள் சிக்கியது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சுப்பிரமணி ( வயது 24) கைது செய்யப்பட்டார் இதேபோலதடகம் ரோடு கோவில் மேடுபஸ் ஸ்டாப் அருகே நடந்த சோதனையில்198 மதுபாட்டில்கள் பறி முதல செய்யப்பட்டது. இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த முனிராஜ் (வயது 47 )கைது செய்யப்பட்டார். கோவை மாநகரம் முழுவதும் நேற்று நடந்த சோதனையில் 46 பேர் கைது செய்யப்பட்டனர். 630 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.