கோவை : மே தினத்தை ஒட்டி , டாஸ்மாக் கடைகளை , மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மீறி கோவையில் உள்ள டாஸ்மாக்கடை, அருகே கள்ளச்சந்தையில் மது விற்பதாக மாநகர காவலுக்கு தகவல் வந்தது. காவல் ஆணையர் திரு. பிரதீப்குமார், உத்தரவின் பேரில் காவலர் போத்தனூர், சிங்காநல்லூர், சரவணம்பட்டி, பீளமேடு சாய்பாபா காலனி, ராமநாதபுரம், காட்டூர், கடைவீதி, ஆர்எஸ் புரம், வெரைட்டி ஹால்ரோடு, ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே திடீர் சோதனை, நடத்தினார்கள்.
அப்போது அங்குள்ள, பெட்டிக் கடைகளிலும், பூமிக்கு அடியிலும், சாக்கடை , கால்வாயிலும் , மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை, செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காமராஜ் ( 25), பால்ராஜ் ( 42 ), மனோகரன் ( 52 ), ராம் (51), சிவகுமார் (24), ராமசாமி(66), வீரமணி ( 25), உட்பட 36 பேர் கைது. செய்யப்பட்டனர், 380 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.