கோவை : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பொகளூர் தாளத்துறையை, சேர்ந்த ரமேஷ், (31), இவர் உறவினர்கள் மூவருடன் சிறுமுகை, வெள்ளிக்குப்பம்பாளையத்தில் டாஸ்மாக், கடையில் மது குடித்துள்ளார். மதுபோதையில் ரமேஷுக்கும், டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்த மணிகண்டன், என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மணிகண்டன் தாக்கியதில் ரமேஷ், கீழே விழுந்தார். காது அருகே காயமடைந்த அவர் மேட்டுப்பாளையம், அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை பெற்றார். வீட்டுக்கு சென்ற அவர் மயங்கிய, நிலையில் இருந்ததால், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமுகை காவல் துறையினர், வழக்கு பதிந்து பார் சப்ளையர் மணிகண்டனை (26),அவரை, கைது செய்தனர்.