கோவை : (11/07/2022), ஆம் தேதி, கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் கோவை மாநகர சி 4, ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான சிவானந்தா காலனி, காந்தி நகர், மருதப்பா கோனார் வீதி மற்றும் சங்கனூர், ஆகிய பகுதிகளுக்கு நடை ரோந்து சென்றார்.ரோந்தின்போது அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும் மாணவியருக்கும், மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கும், அவசர காலத்திற்கு உதவும் வகையில், தமிழ்நாடு காவல்துறையால், இலவசமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காவலர் உதவி மொபைல் செயலியை உபயோகப்படுத்துவதற்கும், அதன் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
சங்கனூர் ஓடை பகுதியில், தணிக்கை செய்யும் போது ஓடை பகுதியில் ஆக்கிரமித்துள்ள புதர் செடிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க உடன் வந்த காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் சி 4, ரத்தினபுரி காவல் நிலையத்தையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். புதிய காவல் நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்தபோது, தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழக அதிகாரிகளும் உடன் இருந்தார்கள் காவல் ஆணையர் அவர்கள் இப்பகுதியை சுற்றி நடை ரோந்து செய்த போது உடன் இருந்த சி 3 சாய்பாபா காலனி சரக காவல் உதவி ஆணையர் திரு. சையது பாபு, மற்றும் சி 4, ரத்தினபுரி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் கண்ணன், ஆகியோருக்கு மேற்படி பகுதியில், குற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் கஞ்சா ஒழிப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்.