கோவை : கோவை ஏப் 26, கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை உதவியாளராக பணியாற்றி வந்தவர் செல்வராஜ், இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ 5 லட்சத்து 85 ஆயிரத்து 893, சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைகோவை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர் செல்வராஜுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 5 ஆயிரம் அபராதமும், விதித்து நீதிபதி ராம்தாஸ் நேற்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.