மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பங்குன்றம் வெயிலு உகந்தம்மன், கோவில் உள்ளது .
இந்த கோவிலில், மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பிரேமலதா (45), ஆகியோர் பூக்கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வெயிலுக்கு உகந்த அம்மன் கோவில், அருகே ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறி, ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள், நடவடிக்கை எடுத்தனர். இதனை எதிர்த்து, மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம், மண்டலம் 5 -ல் மேயர் திருமதி .இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராசன், மண்டல தலைவர் கதிருமதி . விதா விமல் தலைமையில் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ,பூக்கடை நடத்தி வந்த பிரேமலதா, மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் மேயர் முன்பு தீக்குளிக்க வந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி. சுந்தரி தலைமையில் காவல் துறையினர், மண்ணெண்ணய் கேனை கைப்பற்றி, அவரை தீக்குளிக்க முயற்சியில் இருந்து தடுத்தனர். இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பிரேமலதா மற்றும் அவரது கணவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து துணை மேயர் கார் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருப்பரங்குன்றத்தில், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி