அரியலூர் : அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கீழசம்போடை, கிராமத்தில் சிதம்பரம்- ஜெயங்கொண்டம், நெடுஞ்சாலையின் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த, அய்யப்பன் (55), இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை 5 மணியளவில், வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கருவறையில் உள்ள, கிரில் கேட் மற்றும் கதவுகளில் உள்ள 2 பூட்டுகள், உடைக்கப்பட்டு கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த, பூசாரி உள்ளே சென்று பார்த்தார், கருவறையில் உள்ள மாரியம்மனின் கழுத்தில அணிந்திருந்த, தாலி, தாலி காசுகள், என 28 கிராம் தங்க நகைகள், மற்றும் கோயில் உண்டியல், வெண்கல ஆழ்வார் சிலை, மற்றும் கழுத்திலிருந்து 4கிராம் தாலியும், பக்தர்கள் தலையில் வைக்கப்படும், கிரீடம் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த, மீன்சுருட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை, வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மக்களிடையே, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.