மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் இக்கோயிலுக்கு சொந்தமாக ஆயிரம், ஏக்கர் நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. சொத்து பராமரிப்பு பதிவேடுகளின் அடிப்படையில், நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் நேற்று பொன்மேனி தானத்தவத்தில் 66.67 ஏக்கர் நிலங்கள் இருப்பது தெரியவந்தது. பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தின், கவனத்திற்கு வராமல் இவை இருந்தன. மண்டல இணை ஆணையர் திரு. செல்லத்துரை, கோயில் துணை ஆணையர் திரு. அருணாசலம், தலைமையில் இந்த இடம் நேற்று மீட்கப்பட்டது. துணை ஆணையர் கூறுகையில், ”அடுத்தடுத்து கோயில் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மீட்கப்படும். பொன்மேனியில் மீட்கப்பட்ட இடம் விரைவில் கோயில் நிர்வாகத்திற்கு, வருமானம் வரக்கூடியதாக மாற்றப்படும்,” என்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி