சேலம் : கடந்த (27/04/2022),ஆம் தேதி சங்ககிரி உட்கோட்டம், கொங்கணாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோணசமுத்திரம் கிராமம் கண்ணியம்பட்டி பகுதியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கந்தன்(60), என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பையன் என்ற நல்லதம்பி (50), என்பவருக்கும் தட வழி சம்பந்தமாக, முன்விரோதம் இருந்து வந்தது சம்பவ நாளன்று குற்றவாளிகள், நல்ல தம்பி, மணிகண்டன், சேட்டு, ஆகியோர் ஒன்று சேர்ந்து முன்விரோதம் காரணமாக முன்னாள், பஞ்சாயத்து தலைவர் கந்தனை கொடு வாளால் வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில், இருந்தவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ம. ஸ்ரீ அபிநவ் இ.கா.ப, அவர்களின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் திரு . கார்மேகம்இ.ஆ.ப, அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில், அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்