தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகரப் புறப்பகுதியான மேலக்காவேரியில், (31.05.2022), செவ்வாய்கிழமை மாலை நடந்த தினேஷ் என்பவரின் கொலை வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. அசோகன், அவர்களின் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அழகேசன், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. கீர்த்தி வாசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. ராஜா, திரு. செல்வகுமார், காவலர்கள் திரு. பாலு, திரு. நாடிமுத்து ,திரு. சுரேஷ், திரு. ஜனார்த்தனன், திரு. பார்த்திபன்,திரு. நிசார்,திரு. அசோக், ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் துறையினர், இந்த கொலைச் சம்பவத்தில், தீவிரமாக செயல்பட்டனர்.
இதில் தொடர்புடைய மேலக்காவிரி கர்ணன் மகன் மணிகண்டன் (27), கும்பகோணம் து.பாளையத்தெரு கணேசன் மகன் கார்த்திக் (21), மேலக்காவிரி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் விஜயகுமார் (22), செல்வராஜ் மகன் சிபிராஜ் (19) , பாலகுரு மகன் சந்தோஷ் குமார் (23), கும்பகோணம் செட்டிமண்டபம் ராஜன் மகன் தருண்பாலாஜி (19), ஆகிய ஆறு நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில், அடைக்கப்பட்டார்கள். மேலும் இக்கொலையில், முக்கிய குற்றவாளியான மேலக்காவிரி பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் தீனா(எ) தீன தயாளன் (28), என்பவரை காவல் துறையினர், தேடி வந்த நிலையில் அவர் கேரளா மாநிலத்தில், மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து கேரளா மாநிலத்திற்கு விரைந்து சென்ற கும்பகோணம் தனிப்படைப் காவல் துறையினர், அவரை கைது செய்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில், வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்