காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த பூந்தண்டலம் திருப்பதிநகர், முதல் தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி நளினி (49), யின் சகோதரர் ரவி (43), இவருடைய மகன் கமலக்கண்ணன் சிறு வயது முதலே சென்னையில், தங்கி படித்து வந்தார். அப்போது கமலக்கண்ணன் தன்னுடன் படித்து வந்த வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த ரேணுகா தேவி என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த (2.4.2015), அன்று கமலக்கண்ணன் மாயமானதாக நளினி காவல் துறையில், புகார் அளித்தார். இந்த நிலையில் அமரம்பேடு ஏரிக்கரையில் வெட்டுகாயங்களுடன் கமலக்கண்ணன் இறந்து கிடந்தார். இந்த கொலை வழக்கு குறித்து சோமங்கலம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மணிகண்டன் (35), நெல்லை மாவட்டம் பணவடலி சத்திரம் தேவர்காலனி பகுதியை சேர்ந்த குமார் என்ற கோம்பன் (33), வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்த ரேணுகாதேவி ஆகியோரை காவல் துறையினர், கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பழவத்தி ராமபுரம் பகுதியை சேர்ந்த கோமு, என்கிற கோமுபாண்டி (34), கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், நெல்லையில் கோமுபாண்டி தலைமறைவாக இருப்பதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து மணிமங்கலம், காவல் உதவி ஆணையர் திரு. ரவி, மேற்பார்வையில், சோமங்கலம் காவல் ஆய்வாளர் திரு. சிவகுமார், தலைமையில் தனிப்படையினர் நெல்லை மாவட்டம் சென்று கோமு பாண்டியை கைது செய்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்