தர்மபுரி : தர்மபுரி பென்னாகரம், பென்னாகரம் அருகே கூசங்கொட்டாய் , பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். கோழி வியாபாரியான இவர் கடந்த 2012- ம் ஆண்டு நிலத்தகராறில், கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பென்னாகரம் காவல் துறையினர் , மாதேஷ் (25), சுரேஷ் (22), உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிய வந்த மாதேஷ், மற்றும் சுரேஷ், ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென, தலைமறைவாயினர். இவர்களை பென்னாகரம் காவல் துறையினர் , தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாதேஷ், சுரேஷ், ஆகியோர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை அறிந்த பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர் திரு .துரை, தலைமையிலானகாவல் துறையினர், மாதேசை கைது செய்தனர். சுரேசை தேடி வருகிறார்கள்.கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் பெங்களூருல் கைது.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.