தூத்துக்குடி : தூத்துக்குடி டூவிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் மகன் ஜீவ யோசுவா (29), என்பவர் (11.07.2022) அதிகாலை அவரது வீட்டில் விஷமருந்திய நிலையில், இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து மத்தியகாவல் நிலைய காவல் துறையினர், தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரபி சுஜீன் ஜோஸ், தலைமையிலான காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்படி இறந்த ஜீவ யோசுவா என்பவர் தினமும் மதுஅருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த (10.07.2022) அன்று இரவு ஜீவ யோசுவா மதுஅருந்திவிட்டு தகராறு செய்ததுடன் மீண்டும் நேற்று (11.07.2022) அதிகாலை ஜீவ யோசுவா தனது குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஜீவ யோசுவாவின் சகோதரான சாமுவேல் மகன் தவசிமணி (23), என்பவர் ஜீவ யோசுவாவின் வாயில் விசத்தை ஊற்றியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக மேற்படி காவல் துறையினர், தவசிமணியை (12.07.2022) கைது செய்தனர்.
சந்தேக மரண வழக்கின் உண்மையை கண்டறிந்து துரிதமாக செயல்பட்டு கொலை வழக்காக மாற்றி குற்றவாளியை உடனடியாக கைது செய்த மத்தியபாகம் காவல் நிலைய காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல் பாலாஜி சரவணன், அவர்கள் பாராட்டினார்.