தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மணல் திருட்டு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், கடந்த 2012, ஆம் ஆண்டு கருப்பசாமி என்பவரை 9 நபர்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து மேற்படி நபர்கள் மீது அப்போதைய காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் குமார், அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். இவ்வழக்கு விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் (12.07.2022) வழக்கை விசாரணை செய்த நீதிபதி திருமதி. அனுராதா அவர்கள் குற்றவாளிகளான ஆலங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன்களான ராஜ் என்ற செல்வராஜ்(50), சுரேஷ் (45), ராஜா என்ற ராஜசேகரன் (38), வைத்திலிங்கம் என்பவரின் மகனான அருள் பெருமாள் (33), செல்லத்துரை என்பவரின் மகனான முருகன் என்ற வேல்முருகன் (43), ராமையா என்பவரின் மகனான ராஜ் (33), குத்தாலம் என்பவரின் மகனான வைத்திலிங்கம் (33), ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் திறம்பட செயல்பட்ட அரசு வழக்கறிஞர் திரு.வேல்சாமி அவர்களுக்கும் ஆலங்குளம் காவல் துறையினருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.