வேலூர் : திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.A.ஹேமமாளினி, அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் மங்கலம் காவல் நிலைய குற்ற எண் 33/2022 வழக்கில், ஆதாயத்திற்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு மணி நேரத்திற்குள், மூன்று சிறார்களை கைது செய்து , சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மெச்சத் தகுந்த பணியை பாராட்டி (29.05.2022), -ந் தேதி வேலூர் சரக அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வில் தமிழக தலைமை காவல் துறை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர்.Z. ஆனி விஜயா,இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தனர்.