தென்காசி : வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வரும் சிறை தலைமை வார்டன் மணிகண்டன் என்பவருக்கு செல்போன் மூலமாக கொலைமிரட்டல் விடுத்த தளவாய்புரம் ராம்குமார்பாண்டியன், என்பவரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை (13.07.2022), அன்று தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில், காவல் ஆய்வாளர் திரு. சண்முகசுந்தரம், அவர்கள் சமர்பித்தார்..