கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக திருட்டு, செல்போன் பறிப்பு, வழிப்பறி, உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேரி வருவதாக பல்வேறு புகார்கள் காவல் நிலையத்துக்கு சென்றன. இதையடுத்து காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன், உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் திரு. மாதவன், மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் சரக உதவி ஆணையர் திரு. மணிகண்டன், தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. மாரிமுத்து, மற்றும் ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் திருமதி. பரிமளா தேவி, உதவி ஆய்வாளர் திரு. நாகராஜ், ஆகியோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில், தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது பூமார்க்கெட்பேருந்து நிறுத்தம் அருகே 3 சிறுவர்கள், உள்பட 7 பேர் கொண்ட கும்பல், ஒரு முதியவரை சூழ்ந்து கொண்டு அவருக்கு தெரியாமல் பணம் மற்றும் செல்போனை லாவகமாக திருடினர்.
இதனை பார்த்த தனிப்படை காவல் துறையினர், மெதுவாக அவர்களது அருகில் சென்று 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகதூர் மகடோ (36), சந்தோஷ் மகடோ (33), பப்லு மகடோ (23), பீகாரை சேர்ந்த மனிஷ்மகோலி (22) மற்றும் பீகாரை சேர்ந்த 15 சிறுவன், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 14 மற்றும் (10), வயது சிறுவன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர், நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 7 பேர் கும்பல் வடமாநிலங்களை சேர்ந்த 7 பேரும் கொள்ளையடிக்கும் நோக்கில், வாரத்தில் ஒரு நாள் கோவை வந்து காந்திபுரத்தில், அறை எடுத்து தங்கி வந்தனர்.
இவர்களில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள். 7 பேரும் எங்கு சென்றாலும் கும்பலாக சென்று பல்வேறு இடங்களில், நோட்டமிட்டு வந்தனர். கடைகளுக்கு செல்லும்போது பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கு எது கிடைத்தாலும் திருடிக்கொண்டு செல்வார்கள். அதிலும் குறிப்பாக விஷேச நாட்களில், எங்கு கூட்டம் அதிகம் கூடும் என பார்த்து அங்கு சென்று செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பிக்பாக்கெட், வழிப்பறி செய்யும் சம்பவங்களில், ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 3 பேரும் காப்பகத்தில், ஒப்படைக்கப்பட்டனர்.