சென்னை : சென்னை புழல் மத்திய சிறையில், இருந்து நேற்று 15 விசாரணை கைதிகளை அம்பத்தூர், குற்றவியல் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்த சிறப்பு துணை சூப்பிரண்டு திரு.அய்யாவு, தலைமையிலான காவல் துறையினர், வாகனத்தில் அழைத்து வந்தனர். அவர்களை நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் வாகனத்தில், ஏற்ற வந்தபோது, வாகனத்தின் அருகே சந்தேகப்படும்படியாக, வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
அவரை பிடித்து அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில், ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் அம்பத்தூர், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (22), என்பதும், விசாரணை கைதிகளுக்கு, கஞ்சா கொடுக்க வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் , அவரிடம் இருந்த 15 கிராம் அளவிலான, 4 பொட்டலங்கள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் , ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.