கரூர் : கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் அருகே உள்ள தும்பிவாடியை, சேர்ந்தவர்கள் தவசிமணி (40), ஜெயராஜ் (47) , இவர்கள் 2 பேரும் கூலி வேலை, செய்து வருகின்றனர். கடந்த மாதம் 27-ந்தேதி ஜெயராஜ், தவசிமணி வீட்டிற்கு சென்றார். அப்போது தவசிமணி கியாஸ் அடுப்பு மற்றும் சிலிண்டரை சுத்தம் செய்து உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, கேஸ் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதில், உடலில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும், அப்பகுதி மக்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு , கொண்டு சென்றனர்.
பின்னர் ஜெயராஜ் மேல்சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தவசிமணி சிகிச்சை முடிந்து கடந்த வாரம் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு , தவசிமணிக்கு உடல்நிலை சரியில்லாததால், மீண்டும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு, கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தவசிமணி பரிதாபமாக இறந்தார். ஜெயராஜுக்கு டாக்டர்கள் சிகிச்சை, அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து , சின்னதாராபுரம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.