இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு & சமூக பாதுகாப்புத் துறை சார்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மேற்படி விழிப்புணர்வு பேரணியை, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப அவர்கள் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்கள். மேலும், இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) திரு.லையோலா இக்னீசியஸ், குழந்தைகள் நல அலுவலர் திரு.துரைராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.துரைமுருகன், குழந்தைகள் உதவி மைய இயக்குநர் திரு.கருப்பசாமி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர்கள் உட்பட சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியானது, இராமநாதபுரம் அரண்மனையில் துவங்கி, சென்ட்ரல் ஃபிளாக் வழியாக சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் காவல்துறை சார்பாக, பேரணியின் முடிவில் இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.