திருச்சி : குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை பேருந்து நிறுத்தும் இடத்தில், அமைக்கப்பட்டுள்ள, பா.ஜ.க கொடி கம்பத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சேதப்படுத்தினார். இதை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், திருச்சி-தோகைமலை நெடுஞ்சாலை, ஆர்.டி.மலை , தோகைமலை பா.ஜ., ஒன்றிய தலைவர் ராஜா, பிரதீப், தலைமையில், மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ஆனந்த் மற்றும் வீரமணி, செந்தில், முருகானந்தம், உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 20க்கும் மேற்பட்டோர் மீது, காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்தனர். சேதப்படுத்தியவர் மீது வழக்கு, இதையடுத்து, பா.ஜ.க, மாவட்ட துணை தலைவர் கொடுத்த, புகார்படி, ஆர்.டி.மலை மெயின்ரோட்டை சேர்ந்த கருணாகரன் மீது, , பா.ஜ.க, கொடி கம்பத்தை சேதப்படுத்தியதாக, தோகைமலை காவல் துறையினர், கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.