மதுரை : மதுரை மாவட்டத்தில், தாக்கல் ஆகும் பாரி குற்ற வழக்குகளை, விரைந்து கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், உத்தரவிட்டுள்ளார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் ஒத்தக்கடை, மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட இரண்டு வீடுகளை உடைத்து சுமார் 77, சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக, கொள்ளை வழக்கில், ஈடுபட்டவர்களை உடனடியாக, கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உத்தரவின் பெயரில் சார்பு ஆய்வாளர் திரு. ஆனந்த் , தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விரைந்து புலன் விசாரணை, மேற்கொண்டு, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் மணிகண்டன், மற்றும் அவனது கூட்டாளி தமிழ்குமரன், ஆகியோர்களை கைதுசெய்து, அவர்களும் இருந்து காணாமல் போன 77 , பவுன் தங்க நகைகள் மற்றும் 1 இரண்டு சக்கர வாகனம் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இருவரும், இவ்வழக்கில் மட்டுமல்லாது, அன்றைய தினத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில், மணிகண்டன் என்பவருக்கு தமிழகம் முழுவதும், பல்வேறு காவல் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவ்வழக்கில் விரைந்து புலன் விசாரணை, மேற்கொண்டு இருவரை கைது செய்த தனிப்படையினரை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன், வெகுவாக பாராட்டினார்கள்.
இதேபோல், மதுரை மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தில், ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை, எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி