திருச்சி : திருச்சி மாநகர காவல்நிலையங்களில், பல்வேறு குற்ற வழக்குகளில், சம்மந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாதிருந்த 201 வாகனங்கள் பொது ஏலத்தில், விற்பனை செய்யும் பொருட்டு விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கும் வகையில், பத்திரிக்கையின் வழியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, (01.06.22)-ம்தேதி திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப.அவர்கள் தலைமையில், கூடுதல் காவல் துணை ஆணையர், மற்றும் கே.கே.நகர் சரக காவல் உதவி ஆணையர் ஆகியோர் முன்னிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 197 இருசக்கர வாகனங்கள், ஆட்டோ – 2,Tata Ace – 1, லாரி – 1 ஆக மொத்தம் 201 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது.
பின்னர், பொது ஏலத்தில், விடப்பட்ட வாகனங்களின் மொத்த விற்பனை தொகையான ரூ.12,83,918/-யை (GST வரிகள் உட்பட) அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், இதுபோன்று திருச்சி மாநகர காவல் நிலையங்களில், பல்வேறு குற்ற வழக்குகளில், சம்மந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத, வாகனங்களை விருப்பமுள்ளவர்கள் பொது ஏலத்தில், எடுத்துக்கொள்ள தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்று திருச்சி மாநகர காவல் ஆணையர், அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.