திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி மாவட்ட காவல்துறையினர், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும், குற்ற செயல்களில் ஈடுபடுவர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில், அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவாளிகளுக்கு பிணை பத்திரங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா வழக்குகளில், கைது செய்யப்படும் குற்றவாளிகளின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 6 மாதத்தில் கொலை, கொள்ளை மற்றும் குற்ற சம்பவங்களில், ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களில், 109 நபர்களுக்கு சட்ட விதிகளுக்குட்பட்டு குற்ற சரித்திரபதிவேடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய குற்றவாளிகளான சிங்கிகுளத்தை சேர்ந்த வானுமாமலை என்ற சுரேஷ், ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த கந்தன், சுத்தமல்லியை சேர்ந்த பச்சமாள், மேலகாடுவெட்டியைச் சேர்ந்த வான்பாண்டி என்ற வானு, வாகைகுளத்தைச் சேர்ந்த சுரேஷ், மூலக்கரைபட்டியை சேர்ந்த இளங்கோ, பிரம்மதேசத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி, மருதுபாண்டி, கீழஏர்மாள்புரத்தை சேர்ந்த முருகன் என்ற கருப்பை முருகன், சேரன்மகாதேவியை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற ஐயப்பன், பெருமாள் சுப்ரமணியன் என்ற பாட்ஷா, வீரவநல்லூரைச் சேர்ந்த ஆசைதம்பி அலெக்ஸ்குமார், வடக்கு அரியநாயகிய புரத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்ற கார்த்திக் முக்கூடலை சேர்ந்த குமார் என்ற கொம்பு குமார் உட்பட 109 நபர்களுக்கு குற்ற சரித்திரபதிவேடு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து அவர்களின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.