பெரம்பலூர்: பாடாலூர் வட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் பொருட்டு தனிப்படையினை அமைத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று 19.03.2022-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட 474/21 என்ற குற்ற வழக்கில் ஈடுபட்ட எதிரி நந்தகுமார் @பழனிச்சாமி 20/22, S/oஆறுமுகம், புதுமாரியம்மன் கோவில் தெரு, லாடபுரம் (po), பெரம்பலூர்(Dt) மற்றும் மருவத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட 44/22 என்ற குற்ற வழக்கில்.
ஈடுபட்ட எதிரி தினேஷ்குமார் 22 / 22, S/o பெரியசாமி, 207, A, கருப்பராயன் கோவில், JJ நகர், அங்காளக்குறிச்சி, பொள்ளாச்சி, கோயமுத்தூர் மாவட்டம் என்பவர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்கள். &மேற்படி எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த தனிப்படை காவல்துறையினரான உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் மற்றும் அவரது குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பெரிதும் பாராட்டினார். என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.