பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர், கிராமத்தில் சாராயம் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு , பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அரும்பாவூர் உதவி ஆய்வாளர்
திரு .வினோத் கண்ணா, தலைமையிலான காவல் துறையினர், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அரசலூர் கிராமத்தை சேர்ந்த, முருகன் (30), அய்யனார் (32), மணிகண்டன் (28), ஆகிய 3 பேர் சாராயம் விற்றுக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைகாவல் துறையினர், பிடிக்க முயன்ற போது மணிகண்டன், அய்யனார் ஆகியோர் தப்பி ஓடினர். முருகனை காவல் துறையினர், மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.