திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தில் பொறுப்பேற்றதிலிருந்து, குற்றங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கை, மேற்க்கொண்டு வருகிறார். பேருந்துகளில் செயின்பறிப்பு, திருட்டு, போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம், பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு, பிராச்சாரம் செய்ய காவல் அதிகாரிகள், மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும், திருச்சி மாநகர காவல் ஆணையர், அவர்கள் தலைமையில் மாநகர தனியார் பேருந்தின் உரிமையாளர்களுடன், பேருந்துகளில் குற்றச்சம்பவத்தை தடுப்பது, தொடர்பான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் (12.05.22)-ந்தேதி நடைபெற்றது. இதில் காவல் துணை ஆணையர், வடக்கு திரு.R.சக்திவேல், அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தர்மராஜ் டிரான்ஸ்போர்ட், உரிமையாளர் திரு.தர்மராஜ், துணைவன் பஸ் சர்வீஸ் உரிமையாளர் திரு.மோகன், மாரீஸ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் திரு.மணிமாறன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய காவல் ஆணையர் அவர்கள், தனியார் பேருந்துகளில் நடைபெறும் திருட்டு, செயின்பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கும், குடிபோதையில் பேருந்தின் நடத்துனர், ஒட்டுனர் மற்றும் பொதுமக்களை தாக்குதல், போன்ற சம்பவத்தில் எதிரிகளை எளிதில் அடையாளம், கண்டுகொள்ள சிசிடிவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவும், மேற்படி சம்பவங்கள் நடக்காமல், இருக்க பேருந்துகளில் சிசிடிவி கண்டிப்பாக பொருத்த வேண்டும், எனவும், தனியார் பேருந்து ஒட்டுனர்கள் பேருந்துகளை அபாயகரமாக ஒட்டுவதை தவிர்க்க, அறிவுரை கொடுக்கும்படியும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் காவல்துறைக்கும், பேருந்தின் உரிமையாளருக்கும், கூட்டு பொறுப்பு உள்ளது என தெரிவித்தார்கள்.
அதனை ஏற்றுக்கொண்ட தனியார் பேருந்தின் உரிமையாளர்கள், பேருந்தில் சிசிடிவி பொறுத்துவதற்கு, முன்னுரிமை கொடுத்து விரைவில் பேருந்தில் சிசிடிவி பொருத்த, நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றவாளிகளின் புகைப்படத்தை நடத்துனரிடம், கொடுத்து குற்றம் நடைபெறாவண்ணம் பார்த்து கொள்வதாக தெரிவித்தனர். திருச்சி மாநகரத்தில் குற்றங்களை தடுக்கும்பொருட்டு, காவல்துறையோடு தனியார் பேருந்தின் உரிமையாளர்கள், இணைந்து செயல்படவேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர், அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சட்டத்தை மதிக்காமல் செயல்படுவோர், மீது தகுந்த சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்கள்.