மாநில குற்றப்பிரிவு காவல்துறை தலைவர் ஒருவரின் தலைமையில் இயங்கி வருகிறது. குற்றப் புலனாய்வுத் துறையில் 7 தனிப்பிரிவுகளும், 34 உட்பிரிவுகளும் உள்ளன. அனைத்து காவல்துறை ஆணையரகங்களும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும.; குற்றங்களை விசாரிப்பதற்கென தனிப்பிரிவுகளைக் கொண்டுள்ளன. சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் கணிணிசார் குற்றத் தடுப்புப் பிரிவு ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதைப் போன்றே மற்றொரு குற்றப் பிரிவு தலைமையகத்திலும் செயல்பட்டு வருகிறது. இவை தவிர போலி மற்றும் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கவும், போலியன சான்றிதழ்கள், முத்திரைத்தாள், கடவுச்சீட்டு, கிரெடிட்கார்டு மோசடி வழக்குகள் போன்ற பல்வேறு குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும் குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை ஈடுபட்டுள்ளது. பெண்களையும், குழந்தைகளையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதைத் தடுத்திட குற்றப் புலனாய்வுத்துறையில் விபச்சாரத் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.