தென்காசி : தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட , பகுதிகளில் அடிதடி கொலைமுயற்சி மற்றும் அரிவாளை காட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ரமேஷ், என்ற நபரை தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின், கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உத்தரவின் பேரில் மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின், கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை (03.05.2022), அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில், காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ், அவர்கள் சமர்பித்தார்.