சென்னை : நகரி அடுத்த, சத்திரவாடா பகுதியைச் சேர்ந்தவர்கள் முனுசாமி, (40), அவரது உறவினர் வனிதா, (35), இருவரும் சாராயம் விற்பதாக காவல் துறையினருக்கு, தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகரி போலீசார் மேற்கண்ட பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது சாராயம் விற்றுக் கொண்டிருந்த முனுசாமி, வனிதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
,எஸ்.ஆர்.புரம் அடுத்த, பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, டில்லிபாபு, (30), வினோத், (28), ஆகிய இருவரும் ‘ஸ்பிளன்டர் பிளஸ்’ இருசக்கர வாகனத்தில், சாராயம் கடத்தி வந்ததை கண்டறிந்த,, எஸ்.ஆர்.புரம் காவல் துறையினர், கைது செய்து, 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளிக்கு ஒராண்டு சிறை.
நகரி அடுத்த, கிருஷ்ணாபுரம், கிராமத்தில் ஒரு வீட்டில் பூட்டை உடைத்து, கடந்தாண்டு, 40 கிராம் நகை திருடி உள்ளார். மேலும், நகரி – நாகலாபுரம் சாலையில், ஒரு வீட்டில் தங்க நகை, பணம், பேரி தெருவில் ஒரு வீட்டில் ‘லேப்-டாப்’ ஆகியவற்றையும் டில்லிபாபு, திருடி உள்ளார். நகரி காவல் துறையினர், டில்லிபாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு, நகரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், குற்றம் நிருபிக்கப்பட்ட டில்லிபாபுவுக்கு, ஒராண்டு சிறை தண்டனையும், 1,500 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி லீலா ஷியாம் சுந்தரி, தீர்ப்பு வழங்கினார்.