காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொருட்டும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், காவலர்களின் பணி நேரம் மற்றும் பணிச்சுமையைக் குறைக்கும்பொருட்டும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., மற்றும் காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த 10 மாதத்தில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 1383 கண்காணிப்பு கேமராக்கள் உட்பட மொத்தம் 4584 ( CCTV Cameras ) பொருத்தியும், புறக்காவல் நிலையங்களை திறந்தும் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவர்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், அப்பகுதியில், உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும், அங்கு 24 மணிநேரமும் காவலர்கள் உள்ளவாறு புறக்காவல் நிலையம் திறந்திட காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Dr.M.சுதாகர். அவர்களின் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பூ.பொ.ஜீலியஸ் சீசர், அவர்களின் மேற்பார்வையில் சிவகாஞ்சி காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.ஜெ.விநாயகம் அவர்கள் மூலம் புறக்காவல் நிலையம் பல்லவர்மேட்டில் அமைக்கப்பட்டு. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 51 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவைகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், உள்ள கட்டுப்பாட்டு அறையிலும் மற்றும் காவல் நிலையத்திலும் கண்காணிக்கும் வசதியுடன் கூடியது. இதனை ( 21.05.2022 ), வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., அவர்களும், காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்களும் துவக்கிவைத்தனர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் IP தொழிற்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் கேமராக்கள் ஆகும். இந்த கேமராக்களின் இயக்கத்தினை காவல்துறை அதிகாரிகள் எந்த இடத்தில் இருந்தும் தங்களின் கைப்பேசியின் வாயிலாகவும் கண்காணிக்க இயலும். இதனால் அப்பகுதிகளில், குற்றம் நிகழும்பட்சத்தில், குற்றவாளிகளை உடனுக்குடன் பிடிக்கவும் ஏதுவாக இருக்கும் என்பது குறிப்படத்தக்கது. மேற்படி நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், பொதுமக்கள் சமூகஆர்வலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்துகொண்டனர். இதுபோன்ற குற்றச்செயல்களை களையவும் பாதுகாப்பு உணர்வினை மேம்படுத்தவும். பொதுமக்கள்
1 ) இல்லந்தோறும் தத்தமது வீடுகளின் முன்பாகவும், 2 ) வியாபாரிகள் தங்களது கடைகள் முன்பாக சாலையை நோக்கியும், 3 ) விடுதிகள், வங்கிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், தனியார் வணிக நிறுவனங்கள், கோவில்கள் ஆகியவற்றின் நிர்வாகிகள் CCTV கேமராக்களை அவர்களது இடங்களின் அருகாமையில், சாலையை உள்ளடக்கி நிறுவுவதற்கு முனைப்புடன் முன்வரவேண்டுமென்றும், 4 ) சமூக ஆர்வலர்கள் பொது இடங்களில், CCTV கேமராக்களை நிறுவி சமூக பாதுகாப்பை மேம்படுத்த வேண்டுமென்றும், 5 ) கிராமப்புறங்களில் அதன் தலைவர்கள் தத்தமது கிராமத்தில் 10 முதல் 20 கண்காணிப்பு கேமராக்களை ( CCTVs ) நிறுவ முன்வரவேண்டுமென்று காவல்துறை அதிகாரிகள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நிறுவப்படும் கண்காணிப்பு கேமராக்கள் ( CCTVs ) இரவு நேரமும் மூன்றாவது கண்ணாக 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்படும் தொழில் நுட்பத்துடனும் ஒரு மாதகாலம் பதிவினை வைத்திருக்கும் வகையிலும், நவீன தொழில் நுட்பத்துடன்கூடியனவாக இருத்தல் அவசியம் என்பது காவல்துறையினரால், எடுத்துரைக்கப்பட்டது. ஆகவே, பொதுமக்கள் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி குற்றமற்ற நகரமாக காஞ்சிபுரத்தை மாற்ற முனைப்புடன் செயல்பட காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்