கரூர் : உத்தமபாளையம் பகுதியில் குரூப் – 2 தேர்விற்கான வினாத்தாள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் பகுதியில்வருகின்ற, (21.05.2022), ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் – 2 க்கான வினாத்தாள், உத்தமபாளையம் சார்நிலைக் கருவூல அலுவலகத்திற்கு, கொண்டு வரப்பட்டது. மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்ட, வினாத்தாள், உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜூனன், துணை வட்டாட்சியர் ஜாகீர் உசேன் முன்னிலையில் இறக்கி வைக்கப்பட்டு, அறைக்கு சீல வைக்கப்பட்டது. உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் திரு. சிலைமணி, தலைமையில் , காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர், நிறுத்தப்பட்டுள்ளனர்.