தஞ்சாவூர் : கும்பகோணம், ஏப்.30, கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள பூட்டியிருக்கும் வீடுகளை, பகலில் நோட்டம் பார்த்து இரவு நேரங்களில் அவ்வீட்டு பூட்டை உடைத்து அங்குள்ள நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்து வந்த மர்ம கும்பலை பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி .ரவளிபிரியா IPS, அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள் அதனை தொடர்ந்து, கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அசோகன், அவர்கள் மேற்பார்வையில் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார், மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. கீர்த்தி வாசன், SSI ராஜா செல்வகுமார், HC திரு. பாலசுப்பிரமணியம் , திரு. நாடிமுத்து , திரு. சுரேஷ், திரு.v ஜனார்த்தனன், திரு.பிரபாகரன், திரு. பிரகாஷ், திருமதி. கவிதா, ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரவிசாரனையில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் பகுதியில் தீவிர வாகன சோதனையிலும் , கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்த நிலையில் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து கும்பகோணம் தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மறைந்திருந்த , கும்பகோணம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன்
பாரத்-(30) , ராஜேந்திரன் மகன் கவியரசன்-(34) , அழகர்சாமி மகன் கார்த்தி- (36) ,ஆகிய மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து , 17 பவுன் நகைகளும், 3 கிலோ வெள்ளி பொருட்களும் கைப்பற்றிய கும்பகோணம் தனிப்படை போலீசார் தாலுகா காவல் நிலையத்தில் ,வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்