குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் IPS உத்தரவின் பேரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் தீவிர வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரத் திற்கு மேற்பட்டோர் மீது மாவட்ட அளவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பணிபுரிந்த 10 சப்-இன்ஸ் பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் IPS பிறப்பித்துள்ளார்.
அதன்படி நேசமணிநகர் சப்- இன்ஸ்பெக்டர் அனில் குமார் வடசேரிக்கும் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் ராஜன் கோட்டாருக்கும், இரணியல் சப்-இன்ஸ் பெக்டர் ராபர்ட் ஜெயன் புதுக்கடைக்கும், சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் கருங்கல்லுக்கும் வடசேரி சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் இரணியலுக்கும், மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பத்மா ராஜாக்க மங்கலத்திற்கும், சுசீந்திரம் சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவிற்கும், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் சுசீந்திரத்திற்கும், கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் மரியரத்தினம் குலசேகரத்திற்கும், புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பென்சிஸ் கொல்லங்கோட்டிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சில இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது மாநில சிறப்பு
செய்தியாளர்
குடந்தை .ப.சரவணன்