சென்னை : சென்னையில் தொடர் குற்றச் சம்பவங்களில், ஈடுபட்டு வந்த 16 பேரை, குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் , கைது செய்தனர். சென்னை, பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் முகமது நவுஷாத் அலி, (35), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பாலாஜி, (28), மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மோகனசுந்தர், (42), உள்ளிட்ட 16 பேர் கஞ்சா கடத்தல், கொலை, கொலை முயற்சி, ஆவண மோசடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில், ஈடுபட்டு வந்தனர்.காவல் ஆணையர் திரு . சங்கர் ஜிவால், உத்தரவுப்படி, 16 பேரையும் குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் , கைது செய்தனர். இந்தாண்டில் இதுவரை, 148 பேர் குண்டர் சட்டத்தில், கைது செய்யப்பட்டு உள்ளனர்.